தினமும் ஊற வைத்த வால்நட் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
வால்ட்நட்ஸ் பெரும்பாலும் மூளை உணவு என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது மூளையின் வடிவத்தை ஒத்திருக்கிறது மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பொதுவாக தினமும் 2-3 வால்நட் பருப்புகள் (சுமார் 30 கிராம் அல்லது ஒரு கைப்பிடி) உட்கொள்வது நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.
வால்நட் பருப்புகளை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட பரிந்துரைக்கின்றனர். ஊறவைப்பது அதன் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது.
அந்த வகையில் தினமும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வால்நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்கைள் எவையென நாம் இங்கு பார்ப்போம்.
இதய ஆரோக்கியம்
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகின்றன. மேலும் இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இரத்த தமனிகளில் கொழுப்பு படிவத்தைத் தடுக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இதனால் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
குடல் ஆரோக்கியம்
அதிக நார்ச்சத்து இருப்பதால் இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை நீக்கவும் உதவுகின்றன. இது குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதனால் சிறந்த குடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.
வீக்கத்தை குறைக்கும்
வால்நட்ஸில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. இவை உடலில் நாள்பட்ட வீக்கத்தைக் குறைக்க உதவுகினறன.