வவுனியாவில் நடந்த பரிதாப சம்பவம் ; வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயும் சிசுவும் பலி
வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண் குளியலறையில் வழுக்கி விழுந்து, கருவில் இருந்த குழந்தையும் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மதவாச்சி பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அறுவை சிகிச்சை
நேற்று (2024.04.22) விடுதியில் குளியலறைக்குச் சென்றபோது வழுக்கி விழுந்து உயிரிழந்தார்.
இதையடுத்து தாயின் சடலத்தை மீட்ட மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த குழந்தையை காப்பாற்றினர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது.
இதேவேளை உயிரிழந்த இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.