தென்னிலங்கையில் இன்று அதிகாலை இடம்பெற்ற பயங்கரம்
பலாங்கொடை தொட்டுப்போல தெண்ண பகுதியில் சுமார் 78 வயதுடைய ஒருவரின் கழுத்தை வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் ஓய்வுப்பெற்ற அதிபரும் ஆறு பிள்ளைகளின் தந்தையுமான ஈ.அபேரத்ன என்னும் வயோதிபர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவர் வீட்டில் பல வருடங்களாக தனிமையிலயே வசித்து வந்துள்ள நிலையில் இன்று காலை தந்தைக்கு உணவு வழங்குவதற்காக மகன் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதன்போது தந்தை கழுத்தறுக்கப்பட்டு கிடந்ததை கண்ட மகன், தந்தையை அவரது வாகனத்தில் உடனடியாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலை எடுத்து சென்றுள்ளார்.
இதனையடுத்து சடலம் பலாங்கொடை வைத்தியசாலையில் மரண பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது பலாங்கொடை நீதிமன்ற பதில் நீதவான் டீ.எம்.சந்திரசேகர சம்பவ இடத்திற்கு வந்து பரிசோதனை செய்ததுடன், இரத்தினபுரி குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் நாயையும் அழைத்து வந்து பரிசோதனை செய்தார்கள்.
மேலும், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் பலாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.