ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு நேரடி தொடர்பு
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்கூட்டியே அறிந்திருந்தார்.
இதில் அவர் நேரடியாக ஈடுபட்ட தகவல்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
விசாரணைகளில் சில முன்னேற்றங்கள்
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளபடி உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து முறையான விசாரணை இன்னமும் நடைபெற்று வருகின்றது.
அத்துடன், விசாரணைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தாக்குதல் தொடர்பான ஆரம்ப விசாரணைகளின் குறைபாடுகள், அலட்சியம் குறித்தும் தற்போது முறையான விசாரணை நடைபெறுகின்றது.
பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட தகவல்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.