ஜனாதிபதி ரணிலுக்கு ஏற்பட்ட முதல் பின்னடைவு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வ கட்சி ஆட்சி அமைக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் உள்ள பல கட்சிகள், கட்சிகளாக அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள விரும்பாத காரணத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன் காரணமாக சர்வ கட்சி அரசாங்கத்துக்குப் பதிலாக சர்வ கட்சி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனினும், அரசாங்கத்துடன் இணைந்தவுடன், அரசியல் கட்சிகளாக இல்லாவிட்டாலும், கட்சிகளிலிருந்து தனித்தனியாக வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளன.
அதன்படி அடுத்த வாரம் அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாகவும் தெரியவருகிறது.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.