பேய் ஓட்டுபரின் மனைவியுடன் தொடர்பு; இருவருக்கு நேர்ந்த கதி; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
மட்டக்களப்பு, மாங்கேணி பிரதேசத்தில் மனைவியுடன் தகாத உறவை பேணியவர் மீது பூசாரியொருவர் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேய்,பிசாசு, ஆவிகளை விரட்டியடிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகக் கூறப்படும் ஆலயமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பூசாரி தலைமறைவு
சம்பவ தினமான நேற்று முன்தினம் (6) குறித்த பூசாரியிடம் அண்ணன், தங்கை என இருவர் சென்றுள்ள நிலையில் குறித்த பூசாரி இருவரையும் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதில் படுகாயமடைந்த அண்ணன் உயிரிழந்துள்ள நிலையில் தங்கை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனக் கூறப்படுகின்றது.
அதேவேளை தாக்குதலை மேற்கொண்ட பூசாரி தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் விசாரணையில் உயிரிழந்த நபருக்கும் பூசாரியின் மனைவிக்கும் இடையே தவறான தொடர்பு இருந்ததை அறிந்தே குறித்த பூசாரி தாக்குதல் மேற்கொண்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு புனானை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதானவர் எனக் கூறப்படும் நிலையில், மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.