நாளை பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்!
உலக இந்துக்களால் வருட ஆரம்பத்தில் கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிக்கை இலங்கையில் நாளை கொண்டாட்டப்படவுள்ளது. உழவர்களும், உழவுக் காளைகளுமே இந்தத் திருநாளின் நாயகர்கள்.
கதிர் அறுவடை செய்து சூரியனுக்கு நன்றி செலுத்த கொண்டாடப்பட்டதே பொங்கல். சூரியன் தனுசு ராசியில் தனது பயணத்தை முடித்து, மகர ராசியில் பயணிக்க தொடங்குவதையே தை மாதப் பிறப்பு என்கிறோம்.

சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழா
நாளை முதல் சூரியனின் உத்தராயண புண்ணிய காலம் ஆரம்பமாகிறது. உத்தரம் என்றால் வடக்கு என்று பொருள். அயனம் என்றால் பயணம். சூரியன் வடக்கு திசையை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கும் நாள்.
அதன்படி தை மாதம் முதல் நாளான நாளை உத்தராயண புண்ணிய காலத்தின் தொடக்க நாள் ஆகும். தை மாதம் ஆரம்பிக்கும் உத்தராயணம் ஆனி மாதம் வரை இருக்கிறது. இந்த 6 மாத காலத்திற்கு சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கிறார்.

இது முடிந்தவுடன் ஆடி மாதம் முதல் நாள் சூரியன் தென்திசை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்குகிறார். இதை தட்சிணாயனம் என்று அழைக்கிறார்கள். சூரியன் மிதுனத்தில் இருந்து மகர ராசியில் நுழையும் நேரம் உத்தராயணம் என்று அழைக்கப்படுகிறது.
சூரியன் இந்த ராசிக்கு மாறும்போது, மங்களகரமான மற்றும் சுபச் செயல்கள் நடைபெறத் தொடங்குகின்றன.
புதிய வேலை, திருமணம் போன்ற மங்கல காரியங்கள்
உத்தராயணம் பிறக்கும் நாள் கடவுளின் நாள் என்று கூறப்படுகிறது. அதனாலேயே இதை உத்தராயண புண்ணிய காலம் என்று அழைக்கிறார்கள்.
எனவே, புதிய வேலை, திருமணம் போன்ற மங்கல காரியங்களை இம்மாதத்தில் தொடங்குவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.

சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக தைப்பொங்கல் பண்டிக்கை கொண்டாடுகிறார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நாளை (15) கொண்டாடப்படுகின்றது.
இதன்படி இந்த ஆண்டு தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்பது தொடர்பான விளக்கத்தை அறிந்துக்கொள்ளலாம்.
பொங்கல் வைக்க உகந்த நேரம்
காலை 6 மணிக்கு சூரியன் உதயமாவதற்கு முன்பு பொங்கல் வைத்து, சூரியபகவானுக்கு படைத்து வழிபடவேண்டும். இதுவே சூரிய பொங்கல் ஆகும். இதற்கு நல்ல நேரம் பார்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
காலை 6 மணிக்கு மேல் பொங்கல் வைத்து வழிபட நினைப்பவர்கள் பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரத்தை கவனிக்க வேண்டும்.

அதன்படி, காலை 6 மணிக்கு மேல் பொங்கல் வைக்க நல்ல நேரம் காலை 7. 45 மணி முதல் 8. 45 மணி வரை, 10.35 முதல் பகல் 1 மணிவரை.
நல்ல நேரம் - காலை 10.30 முதல் 11 வரை, பிற்பகல் 1 மணி முதல் 01.30 வரை.
கெளரி நல்ல நேரம் - மாலை 06.30 முதல் 07.30 வரை. எமகண்டம் - காலை 6 மணி முதல் 7.30 வரை. ராகு காலம் - பிற்பகல் 01.30 முதல் மாலை 3 வரை.