இனிப்பு வகையினால் பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த கதி
Kalutara
Sri Lanka
Hospitals in Sri Lanka
By Yadu
களுத்துறை புலத்சிங்கள கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் மேலதிக வகுப்பொன்றில் பங்கேற்ற ஐந்தாம் வகுப்பில் கல்விபயிலும் ஏழு மாணவர்கள் இனிப்பு (டொபி ) வகையொன்றை கடையொன்றில் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
அம் மாணவர்கள் அதனை சாப்பிட்ட நிலையில் அகலவத்தை பிம்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் பமிலா நிஷாந்தி தெரிவித்துள்ளார்.
10-12 வயதுடைய ஏழு சிறுவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருப்பினும் சிறுவர்களின் உடல் நிலைமை மோசமடையவில்லை எனவும் பிம்புர வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US