பறக்கும் கார் ; உலகை அதிர வைத்த எலான் மஸ்க்!
உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், Roadster 2 என்ற புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. டெஸ்லாவின் அடுத்த தலைமுறை Roadster 2 கார், பறக்கும் கார் என்ற தனது கனவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
ராக்கெட்டைப் போன்ற உந்துவிசைக் கருவிகளின் உதவியுடன், இந்த மின்சார ஸ்போர்ட்ஸ் கார் சிறிது நேரம் தரையிலிருந்து மேலே சென்று , பின்னர் பாதுகாப்பாகத் தரையிறங்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

சில நொடிகள் காற்றில் பறந்த கார்
டெஸ்லா நிறுவனம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் சோதனை மையத்தில் இந்த காரைச் செயல் விளக்கம் செய்து காட்டியுள்ளது.
இந்தச் செயல்விளக்கத்தின்போது, மின்சாரத்தில் இயங்கும் ரோட்ஸ்டர் 2 கார் வளைந்த பாதையில் சென்று, சில நொடிகள் காற்றில் பறந்துவிட்டு மீண்டும் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
மேலும், டெஸ்லாவின் சைபர்டிரக் உள்ளிட்ட கார்களுக்கு மேலே பறந்து செல்வது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் உந்துவிசைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கார் காற்றில் மேலே உயர்ந்து போகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக டெஸ்லாவின் வாகனப் பொறியியல் பிரிவுத் தலைவர் லார்ஸ் மொராவி தெரிவித்துள்ளார்.