ஞானசாரருக்கு ஆதரவான கூடாரங்கள் அகற்றம்!
கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களை மகா சங்கத்தினர் அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) காலை பிறப்பித்த உத்தரவுக்கு மதிப்பளித்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து, காலி வீதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரங்களை சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பிக்குமார் உள்ளிட்ட குழுவினர் அகற்றியுள்ளனர்.
அதிஉயர் பாதுகாப்பு வலயமான ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என நிபந்தனை விதித்து நீதிமன்றத்தில் பொலிஸார் கோரிக்கை விடுத்திருந்தது.