பிரகீத் எக்னலிகொட சம்பவம்; சுரேஷ் சலே நீதிமன்றத்தில் முன்னிலை
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (16) மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைதான நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.