கிழக்கில் உருவாகியுள்ள தீவிரவாத அமைப்பு குறித்து வெளியான தகவல்
கிழக்கு மாகாணத்தின் கல்முனை பிரதேசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தீவிரவாத அமைப்பு ஒன்று தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (04) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு அத்தகைய தீவிரவாத அமைப்பு ஒன்று தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த தீவிரவாத குழு குறித்து மேலதிக விபரங்களை பெறுவதற்கான முயற்சிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.
அதைப் பற்றி உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு பிரிவு தகவல்களை திரட்டி வருகின்றன, பாதுகாப்பு பிரிவு இது தொடர்பாக மிகவும் விழிப்புடன் உள்ளன என்றும் இதன் போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.