தொடரின் முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையேயான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி பல்லேகல மைதானத்தில் இன்று நடைபெற்றது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் அதிகப்படியான ஓட்டங்களாக குசல் மென்டிஸ் 20 பந்துகளுக்கு 37 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
தொடர்ந்தும் 134 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 15 ஓவர்கள் நிறையில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 125 ஓட்டங்களை பெற்றது.
இடையில் மீண்டும் மழை குறுக்கிட்டதன் காரணமாக DLS முறைப்படி, 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி குறித்த போட்டியில் வெற்றிப் பெற்றது.