ஆசியர்கள் மற்றும் அதிபர்களின் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு
ஆசிரியர்கள் - அதிபர்களின் வேதன பிரச்சினையை தீர்ப்பதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக் குழு இதுவரை தம்மிடம் கலந்துரையாடவில்லை என ஆசிரியர்கள் - அதிபர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
வேதன பிரச்சினைக்கு எதிராக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாடு பூராகவும் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் தற்போது முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இணைய வழி கல்வி பணிப்பகிஸ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 30 நாட்கள் நிறைவடைகின்றன. இவ்வாறான சூழலில் அதிபர்கள் - ஆசிரியர்களின் வேதன பிரச்சினையை ஆராய்ந்து குறித்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அமைச்சரவை இணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
எனினும், வேதன பிரச்சினை தொடர்பில் கலந்துரையாட குறித்த குழு இதுவரை கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்க வில்லை என அந்த சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.