அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க விசேட குழு நியமனம்
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க ஒரு விசேட குழு நியமிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதிபர்கள், ஆசிரியர்கள் சேவையில் சம்பள முரண்பாடுகளை தீர்ப் பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு சிறப்புக் குழு ஊடாக அடுத்த ஆறு மாதங்களுக்குள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் முன்வைக்கப்படும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஊடாக கட்டாயமாக பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் வரை அதிபர், ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும் மாணவர்களின் கற்பித்தல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க இணைய வழி கற்பித்தல் நடவடிக்கையை முன்னெடுக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.