வடக்கு கிழக்கில் ஜனாதிபதி அனுரவால் ஏற்பட்ட மாற்றம்!
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் கடந்தகாலங்களை போல் அல்லாது இம்முறை மிகவும் எழுச்சியுடன் மாவீரர் வார நிகழ்வுகளை அனுஸ்டித்து வருகின்றனர்.
மாவீர வாரத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் சிவப்பு மஞ்சள் கொடுகள் பறக்கவிடப்பட்டு மக்கள் சுதந்திரமாக மாவீரர் நினைவு வாரத்தை அனுஸ்டித்து வருகின்றனர்.

கடந்த கால அரசாங்கங்கள் பெரும் கெடுபிடி
கடந்த கால அரசாங்கங்கள் , தமிழ் மக்கள் மாவீரர் நிகழ்வுகளை அனுஸ்டிக்க பெரும் கெடுபிடிகளை விதித்திருந்தது.
அதன் காரணமாக பொலிஸாரும் மக்களுக்கு பெரும் இன்னல்களை கொடுத்து வந்திருந்ததுடன், நீதிமன்றம் ஊடாக தடைகளை பெற்று மாவீரர் நிகழ்வுகளை குழப்புவதில் பெரும் பங்கினையும் வகித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதி அனுர குமார, வடக்கு கிழக்கில் மாவீரர் நிகழ்வுகளை அனுஸ்டிக்க எவ்வித தடைகளையுயிம் விதிக்கவில்லை.
இதன் காரணமாக கடந்த காலங்களை போல் அல்லாது இம்முறை வடக்கு கிழக்கில் மக்கள் எவ்வித கெடுபிடிகளும் இன்றி மாவீரர் வாரத்தை அனுஸ்டித்து வருகின்றனர்.