பிரித்தானியா வாழ் இலங்கையர்களுக்கு உணவில்லை; திருப்பி அனுப்பிய பிரபல ஹோட்டல்!
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரிரித்தானியா வாழ் மூன்று இலங்கையர்கள் தென்னிலங்கையில் வைத்து இன ரீதியாக பாகுபாடு பார்க்கப்பட்டதோடு , பிரபல ஹோட்டல் உன்று உணவு வழங்காது திருப்பியனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் பாதிக்கபப்ட்ட இலங்கையர்கள் சமூக வலைத்தளத்தில், கவலையையும் விரக்தியையும் தெரிவித்துள்ளனர்.
தங்காலை கடற்கரை உணவகம் ஒன்று வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே அங்கு உணவு வழங்குவதாக கூறி , பிரித்தானிய வாழ் இலங்கையர்களை திருப்பி அனுப்பியுள்ளது.

பிரித்தானியாவிலிருந்து வருகை தந்த இலங்கையர்கள்
பிரித்தானியாவிலிருந்து வருகை தந்த மூன்று இலங்கையர்கள் இந்த உணவகத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த காசாளர் அவர்களுக்குச் சேவை வழங்க மறுத்துள்ளார்.
தாங்கள் இலங்கையர்கள் என்பதால் தங்களுக்கு உணவு வழங்கப்படமாட்டாது எனவும் வெளிநாட்டினருக்கு மட்டுமே அங்கு அனுமதி எனவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
குறித்த சம்பவம் , இலங்கையின் சில உணவகங்கள், குறிப்பாக முக்கிய சுற்றுலா வலயங்களில், உள்ளூர்வாசிகளை விட வெளிநாட்டினருக்கு முன்னுரிமை அளிப்பது , கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேசமயம் இச்சம்பவம் தமது தாய்நாட்டில் அந்நியரகளை போல இலங்கையர்களை உணரவைத்ததாக விசனம் வெளியிடப்பட்டுள்ள அதேவேளை , அம்பாந்தோட்டை தங்காலையில் கடற்கரையோர குறித்த உணவகம், உள்நாட்டு மக்களைப் புறக்கணித்து வெள்ளையினத்தவர்களுக்கு மட்டுமே சேவை வழங்குகின்றமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.