கொழும்பில் தமிழர் செறிந்துவாழும் பகுதியில் துணிகர கொள்ளை!
கொழும்பு கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொள்ளை சம்பவம் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர் இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவராவார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர், இரத்மலானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 11 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் ,கையடக்கத்தொலைபேசி , இயந்திரம் , சி.சி.ரி.வி கெமரா மற்றும் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.