லண்டன் விபத்தில் தமிழ் பெண் உயிரிழப்பு; துயரத்தில் குடும்பம்
வடமேற்கு லண்டனில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஏற்பட்ட விபத்தில் தமிழ் பென் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த திங்கட்கிழமை(24) ஹாரோவின் பெஸ்பரோ சாலையில் நடந்த விபத்தில் வெம்பிளியைச் சேர்ந்த 46 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சிறுவன் உட்பட மூவர் காயம்
இதன்போது பேருந்தும் காரும் மோதி இடம்பெற்ற இந்த விபத்தில் 12 வயது சிறுவனும் 30 வயதுடைய ஒரு பெண்ணும் உட்பட இரண்டு பாதசாரிகள் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சம்பவ இடத்தில் நின்ற காரின் ஓட்டுநர், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.