பிரித்தானியாவில் பெண்களிடம் தனது அங்க உறுப்புகளைக் காட்டி அநாகரீகம்; தமிழருக்கு கடும் தண்டனை!
பிரித்தானியாவில் பெண்களிடம் அங்க அவையங்களை காட்டி அநாகரீகமாக வெளிப்படுத்திக் கொண்டதற்காக உணவு விநியோகம் செய்யும் தொழிலில் ஈடுபட்ட தமிழர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்லோவ், கிளிப்டன் (Slough, Clifton) வீதியைச் சேர்ந்த 47 வயதான நபருக்கே ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தனது அங்க உறுப்புகளைக் காட்டி சேட்டை
சந்தேக நபர் 10 ஆண்டுகள் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு உத்தரவின் கீழ் உட்படுத்தப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8-ஆம் திகதி முதல் மே மாதம் 11-ஆம் திகதி வரை சந்தேக நபர் உணவு விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.
தனது வேலையின் ஒரு பகுதியாக மெய்டன்ஹெட் (Maidenhead), ஸ்லோவ் (Slough) மற்றும் வின்சர் (Windsor) ஆகிய இடங்களில் உள்ள பல முகவரிகளுக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் அவர் பெண்களிடம் தன்னை அநாகரீகமாக வெளிப்படுத்திக்கொண்டார் எனக் கூறப்படுகின்றது.
உணவுப் பொதிகளை விநியோகிக்கச் செல்லும் போது எதிர்பாராத விதமாக வீடுகளில் இருக்கும் பெண்களுக்கு தனது அங்க உறுப்புகளைக் காட்டி அநாகரீகமாக நடந்துகொள்வதையே ஒரு பழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் வெவ்வேறு இடங்களில் இவ்வாறான ஐந்து குற்றச்செயல்களில் இவர் ஈடுபட்டது விசாரணையில் உறுதியாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாடுகளைத் தொடர்ந்து, தேம்ஸ் வேலி (Thames Valley) போலீசார் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும் கூற்ப்படுகின்றது.