இலங்கையில் 85 வயதுடைய தொழிலதிபர் செய்த செயல் ; மடக்கிபிடித்த CID
கொழும்பு உயர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட சொத்தை 340 மில்லியன் ரூபாய்க்கு விற்ற சம்பவம் தொடர்பாக, தொழிலதிபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் பம்பலப்பிட்டி பகுதியில் வசிக்கும் 85 வயதுடைய தொழிலதிபர் ஆவார்.

தொழிலதிபர் கைது
குற்றப் புலனாய்வுத் துறையின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவால் நடத்தப்பட்ட விசாரணையின் பேரில் இந்த சந்தேகத்திற்குரிய தொழிலதிபர் கைது செய்யப்பட்டதாக ரகசியப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு உயர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட 340 மில்லியன் மதிப்புள்ள சொத்தை இந்த சந்தேக நபர் வேறொரு தொழிலதிபருக்கு விற்றதாகவும், அது நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட சொத்து என்பதை அறிந்து கொண்டே இந்த மோசடியை அவர் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் இன்று (05) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.