62 வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் விருது பெற்ற தமிழர்! யார் தெரியுமா
62 வருடங்களுக்கு முன்னர் யூன் 25 ஆம் திகதி முழு இலங்கையர்களுக்கும் பெருமை சேர்த்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் எனும் தமிழர்.
அத்துடன் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் எனும் தமிழர் பங்குபற்றி உயரம் பாய்தலில் 2.03 மீட்டர் உயரத்தை தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார்.
அப்போதைய நாட்டின் பிரதமர் திரு. பண்டாரநாயக்க , நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்களுக்கு வாழ்த்து செய்தியை அனுப்பினார். இதனால் முழு இலங்கையும் பெருமை கொண்டது.
அதேவேளை இலங்கைக் கல்விமானும், விளையாட்டு வீரரும் ஆவார். 1952, 1956 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளிலும் மூன்று ஆசியப் போட்டிகளிலும் இலங்கைக்காக விளையாடியவர்.
யாழ்ப்பாண மாவட்டம், பெரியவிளான் என்ற ஊரில் பிறந்தவர். முதலில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும், பின்னர் கொழும்பு சாந்த ஜோசப் கல்லூரியிலும் பயின்ற இவர் கல்லூரி மாணவனாக இருந்தபோதே அகில இலங்கை சாதனையை முறியடித்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாது இலங்கை, சியேரா லியோனி, பப்புவா நியூ கினி, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பணியாற்றிய நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் ஐந்து ஆண்டுகள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.