70 ஆண்டுகளின் முன் திருத்தம்; கேட்பாரற்று கிடக்கும் புங்குடுதீவு பாலம்
சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு புங்குடுதீவு மக்களின் அயராத முயற்சியால் அமைக்கப்பட்ட கிட்டத்தட்ட ஐந்து கிலோமீற்றர் நீளமான புங்குடுதீவு வாணர் தாம்போதி என்று அழைக்கப்படுகின்ற கடற்பாலம் இருமருங்கும் சேதமடைந்து வருகின்றது.
புங்குடுதீவுக்கு மாத்திரமன்றி நயினாதீவு, நெடுந்தீவு பிரதேசங்களுக்கும் ஒரே தரைப் பயண மார்க்கமாக காணப்படுகின்றது.
அதோடு வருடாந்தம் இலட்சக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்ற இந்த வீதி கடந்த வருடம் காபெற் இடப்பட்டு ஓரளவு நல்ல நிலையில் உள்ளபோதிலும் வீதியின் இரு மருங்கும் மோசமாக சேதமடைந்து வருகின்றது.
இந்நிலையில் கடும் மழை பொழிய ஆரம்பித்துள்ள நிலையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ( RDA ) விரைவாக இப்பாலத்தின் இருமருங்கினையும் திருத்தியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புங்குடுதீவு சிவில் அமைப்பும் மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.