ஐ.ம.சக்தி தலைமையில் ஐ.தே.கட்சி ; சஜித் பிரேமதாச வெளியிட்ட தகவல்
ஐக்கிய மக்கள் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் ரீதியாக ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று (09) நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலும், அதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு நிர்வாகக் குழு கூட்டங்களிலும், இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி ஏகமானதாக முடிவெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டையும் மக்களையும் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்தும், பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கவதற்கு நடைமுறை மற்றும் மக்கள் சார்ந்த கொள்கை ஒப்பந்தங்களின் அடிப்படையில் இரு கட்சிகளின் அடையாளத்தையும் பேணுவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியுள்ளார்.