விஜய்யின் பிரசாரத்திற்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின், பிரசாரத்திற்குத் தடை விதிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்த கண்ணன் என்பவரினால், சென்னை உயர் நீதிமன்றில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபைத் தேர்தலை இலக்கு வைத்து, வாரம்தோறும் சனிக்கிழமைகளில், பிரசாரம் செய்வதற்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
அந்த வகையில் அவர் நேற்று கரூரில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றுப் பேசியிருந்தார். இதன்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 10 குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரத்திற்குத் தடை கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.