படகில் இந்தியா நுழைய முயன்ற இரு இலங்கையர்கள் கைது ; தமிழக பொலிஸார் தீவிர விசாரணை
கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், இன்று காலை கடல் வழியாக படகில் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணை
கைது செய்யப்பட்ட இருவரும் தமிழகத்தின் இராமேஸ்வரம் கடற்கரையில் கரையிறங்கி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோதே பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் மற்றும் விஸ்வநாத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் தமிழகத்திற்குள் போதைப்பொருள் கடத்தல் நோக்கில் ஊடுருவியவர்களா அல்லது மோசடிக் கும்பலுடன் தொடர்புடையவர்களா என்பது குறித்து தமிழக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் சரளமாக உரையாடக்கூடியவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.