திடீரென தீப்பற்றி எரிந்த தமிழ் எம்.பியின் வாகனம் ; தெய்வாதீனமாக தப்பிய உயிர்
வன்னிப் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் வாகனத்தில் திடீர் தீப் பரம்பல் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை இடம்பெற்றுள்ளது.

மின்சார சீரின்மை
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் வாகனம் மன்னார் வீதியில் பயணித்த போது வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம் பகுதியில் வாகனத்தில் மின்சார சீரின்மை காரணமாக தீப் பரவல் ஏற்பட்டது.
இதனையடுத்து வாகன சாரதியும், அப் பகுதியில் நின்றவர்களும் துரிதமாக செயற்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.
இச் சம்பவத்தின் போது வாகனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பயணிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.