திடீரென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வெளியிட்ட அறிவிப்பு
நாட்டில் எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய பலமான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Santhirakanthan) தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிளவடையும் கிழக்கு சார்ந்த கூட்டமைப்பிற்கான ஒரு அழுத்தத்தை தோற்றுவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனவே கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய அனைவரையும் ஒன்றினைத்து புதிய கூட்டமைப்பை உருவாக்கவுள்ளதாக சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.
உதாரணமாக போராட்ட அமைப்புக்களில் இருந்து வெளியேறியவர்கள் மற்றும் போராட்டங்களின் வலி தெரிந்தவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், சில அமைப்புகள் போலி தேசியவாதிகளை நம்பியே செயற்படுவதாக சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் போலி தேசியவாதிகளின் பின்னால் நிற்பவர்கள் நிச்சயமாக தோல்வியை சந்திப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கட்டாயம் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும் என்றும் அப்போது தான் மக்களின் மனங்களை அறியமுடியும் என்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.