தமிழர் பகுதியில் சீரழியும் கலாச்சாரம்; 26 வயதில் நான்கு திருமணம் செய்த யுவதி !
அண்மைய காலங்களில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறு கலாசார சீரழிவுகள் , குற்ற செயல்கள், ஈழத் தமிழினத்தை அழிவு பாதைக்கு செல்லும் அவலம் தொடர்பில் சமூக வலைத்தங்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
போதைபொருள் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் இளம் குடும்ப தலைவிகள் ஒருபுறமும் , மறுபுறம் போதையாலும் குற்றசெயல்களாகும் கெட்டு சீரழியும் இளம் சமுதாயம் ஒரு புறமுமாக ஈழத தமிழர் கலாச்சாரம் வழி மாறி போய்கொண்டிருக்கின்றது.

போதைபொருள் விற்பனை - கள்ள உறவுகள்
ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்த காலங்கள் மலையேறி கொண்டிருக்கின்றது. குடும்ப வன்முறைகள் கொலைகளில் வந்து முடிகின்றது. சுகபோக வாழ்க்கை மற்றும் பணத்தின் மீதான மோகம் வாழ்க்கையில் அமைதியையும் உண்மையையும் மாற்றி விடுகின்றது.
அந்தவகையில் யாழில் தவில் வித்துவானை நம்பி கணவன் பிள்ளைகளை கைவிட்டு சென்ற குடும்ப பெண் , தகாத உறவால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முல்லைத்தீவில் 26 வயதான பெண் ஒருவர் நான்கு திருமணங்கள் செய்த சம்பவங்கள் என பல்வேறு கலாச்சார சீரழிவுகள் தமிழர் பகுதிகளில் அரங்கேறி வருகின்றது.

அதுமட்டுமல்லாது வவுனியாவில் நேற்று முன் தினம் மனைவியின் தகாத உறவால் கணவன் மனைவியை கொன்று பிள்ளையுடன் பொலிஸாரிடம் சரணடைந்த சம்பவமும் நடந்துள்ளது.
அதேவேளை புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் எம்மவர்கள் சிலரும் இந்த சம்பவங்களுக்கு துணைபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் நம் கலாசாரம் இப்படி போகிறதே என தம்மை சீர்திருத்தி வாழ பழகாவிட்டால் அடுத்த சமுதாயத்தை எங்கே கொண்டு செல்லும் என்கின்ற கேள்வியை சமூக மட்டத்தில் எழவைத்துள்ளது.
அதிலும் இளவயது குடும்ப பெண்கள் கலாசார சீரழிவுகளை நோக்கி நகர்வது வேதனைக்குரிய விடயம் ஆகும். உலகில் ஒப்பற்ற தமிழனமாக போற்றப்பட்ட எம்மினம் இன்று தடம்மாறி தடுமாறி போய்கொண்டிருக்கின்றது.

குறிப்பாக யாழ்ப்பாணம், வன்னி பிரதேசங்களில் திட்டமிட்டு பரப்படும் விச செடிகள் படர்வது போல கலாசார சீரழிவுகள் தலை விரித்து ஆடுவது வேதனையை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.