திருமணம் செய்வதாகக் கூறி சகோதரிகளின் வாழ்க்கையை சீரழித்த இளைஞன்
இந்தியாவின் பெங்களூர், பாகல்குன்டே பகுதியில், திருமணம் செய்வதாகக் கூறி பெண் ஒருவரை ஏமாற்றிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமணம் செய்வதாகக் கூறி அந்த பெண்ணிடம் இந்திய மதிப்பில் சுமார் 20 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் 200 கிராம் தங்கத்தை வாங்கியுள்ளார்.
இதேவேளை கைது செய்யப்பட்ட இளைஞர், முதலில் தான் காதலித்த பெண்ணின் தங்கையை பாலியல் ரீதியாக வற்புறுத்தியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், அந்த இளைஞருக்கு ஏற்கனவே திருமணமாகியமை அவரது காதலிக்கு தெரியவந்துள்ளது.
அது குறித்துக் கேட்டபோது, தனது மனைவியை விவாகரத்து செய்துவிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பெண்ணை உடலியல் ரீதியாக அந்த இளைஞர் தொடர்ந்தும் சித்திரவதை செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கொடுமை தாங்க முடியாமல் அங்கிருந்து தப்பிச் சென்ற அந்தப் பெண், காவல்துறையில் முறைப்பாடளித்துள்ளார்.
இதன் அடிப்படையில், மோசடி வழக்குகளின் கீழ் குறித்த இளைஞனை பெங்களூர் காவல்துறையினர் கைது செய்து , அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.