ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி: அதிரடி காட்டிய குசல் மெண்டிஸ்
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5வது டி20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்று, இதனால் தொடர் தோல்வியை தவிர்த்துக்கொண்டது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த ஆஸ்திரேலியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக, மேத்யூ வேட் 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இலங்கை அணி சார்பில் துஷ்மந்த சமீர 30 ஓட்டங்களை கொடுத்து 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பின்னர் 155 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணீ சார்பில் குசல் மெண்டிஸ் 69 ஓட்டங்களையும், தசுன் சானக 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதேவேளை, 5 போட்டிகளைக்கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 4-1 என்ற அடிப்படையில் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
