தமிழர் பகுதியொன்றில் கொலை வழக்கிற்கு ஆஜராக சென்றவர்களுக்கு மர்ம கும்பல் செய்த சம்பவம்
கொலை வழக்கில் ஆஜராவதற்காக மூதூர் நீதவான் நீதிமன்றத்திற்குச் சென்று கொண்டிருந்த ஐந்து பேர், இன்று காலை ஈச்சலம்பற்று, பகுதியில் வைத்து வெட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வழக்கிற்காக நான்கு பேர் மூதூர் நீதவான் நீதிமன்றத்திற்குச் செல்வதற்காக பேருந்தில் ஏறும்போது, முகமூடி அணிந்த கும்பல் ஒன்று பேருந்தில் புகுந்து, நான்கு பேரையும், பேருந்து நடத்துனரையும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலத்த காயம்
இதன் போது ஐவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக ஈச்சலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
கருப்பு உடை அணிந்த முகமூடி அணிந்த எட்டு பேர் கொண்ட குழு, பேருந்தில் புகுந்து, வாள்களால் வெட்டி தப்பிச் சென்றுள்ளனர்.
அந்தக் குழுவில் இருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் ஈச்சலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக, ஈச்சலம்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.