யாழில் மூன்று கோடிக்கு மேற்பட்ட கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் கைது
யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை பொலிஸாரால் இன்று மதியம் நூறு கிலோவிற்கு மேற்பட்ட 47 கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.
அகன்று செல் முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டின் கீழ் பொலிசாரின் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையின்கீழ் தற்போது போதை அற்ற நாடு வேலைத்திட்டம் இடம் பெற்றுவருகின்றது.

இந்நிலையில் பருத்தித்துறை பொலிஸாரின் தீவிர கண்காணிப்பிலிருந்த சந்தேக நபர்கள் இன்றைய தினம் கேரள கஞ்சாவை பருத்தித்துறை பொலிஸ் பிரிவிலுள்ள கடற்பரப்பில் இறக்க முற்பட்டபோது பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான பொலிஸார் சுற்றிவளைத்து 47 பொதி கஞ்சாவை கைப்பற்றியதுடன் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அந்த நபர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களும், மற்றும் கஞ்சா படகு உட்பட்ட பொருட்களும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளன.
இதேவேளை இங்கு கருத்து தெரிவித்த பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் தொடர் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் பலர் கைது செய்யப்படவுள்ளதாகவும், இன்று கைப்பற்ப்பட்ட கஞ்சாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் மூன்று கோடிக்கு அதிகம் என்றும் தெரிவித்தார்.