நண்பரின் உயிரை பறித்த சந்தேக நபர்கள் கைது ; மதுபோதையால் வந்த வினை
நாகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெஹிகொடவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வியாழக்கிழமை (15) நாகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெஹிகொடவத்தை பகுதியில், உயிரிழந்தவர் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறு முற்றியுள்ளது.

மேலதிக விசாரணை
இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் இருவரும் கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்த கொலையைச் செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் மாபலகம பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவராவார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 48 மற்றும் 59 வயதுடைய இரண்டு சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் நாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.