ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பதற்றம் ; தூக்கி எறியப்பட்ட நீதிமன்ற தடை உத்தரவு
முதலாம் இணைப்பு : ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்த துறவிகளிடம், பொலிஸார் நீதிமன்ற உத்தரவை வாசித்துக் காட்டி ஒப்படைத்துள்ளனர்.
இதன் போது ஒருவர் அதனை தூக்கி எறிந்த காட்சிகளும் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையால் காலிமுகத்திடலில் ஒரு வழிப் போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது
ஜனாதிபதி செயலக வளாகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தங்கியிருப்பதைத் தடுக்கும் நோக்கில், 54 பேருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


பொலிஸாரின் கோரிக்கை
பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
யாழில் 8.5 கோடி ரூபாய் சொத்துக்கு நேரந்த கதி ; திடீர் பணக்காரருக்கு அதிகாரிகள் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்
அதிஉயர் பாதுகாப்பு வலயமான ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க வேண்டாம் என பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கமைய தற்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிக்குமார் அங்கிருந்து அகற்றப்பபடவுள்ளதாக அறியமுடிகிறது.