பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் திடீரென மரணம்!
சட்டவிரோத மதுபான விற்பனை ஈடுபட்ட சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபரொருவர் பொலிஸ் காவலில் இருந்த போது திடீர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த நபர் 61 வயதுடைய திஸ்ஸ வீதி, ரன்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று சனிக்கிழமை (18-12-2021) ஹூங்கம பொலிஸ் பிரிவில் ரன்ன நகரத்திலுள்ள ஹோட்டலொன்றில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய சுற்றிவளைப்பொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்பின் போது, குறித்த ஹோட்டலிலிருந்து 750 மில்லி லீற்றர் கொள்ளளவுடைய 2 மதுபான போத்தல்களும், 180 மில்லி லீற்றர் கொள்ளளவுடைய 10 மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, சந்தேகநபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் ஹூங்கம பொலிஸ் நிலையத்தில் விளக்களமறியிலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த சந்தேகநபர்களில் ஒருவர் திடீர் சுகவீனமுற்று ரன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்திருப்பதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேகநபரின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹூங்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.