யூடியூப் பார்த்து கர்ப்பிணிப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை ; இறுதியில் காத்திருந்த பேரிடி
யூடியூப் வீடியோவைப் பார்த்துவிட்டு, பிரசவ வலியால் அவதிப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து குறித்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தின் கஹல்கான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அறுவை சிகிச்சை
சம்பவ தினத்தன்று இரவு அப் பிரதேசத்தை சேர்ந்த கர்பிணிபெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதித்தபிறகு, மருத்துவரும், அவரது உதவியாளர்களும் அறுவை சிகிச்சை செய்யத் தயாரானார்கள்.
பெண்ணின் குடும்பத்தினரிடம் சம்மதம் பெற்ற பிறகு, மருத்துவர் யூடியூப்பில் ஒரு வீடியோவைப் பார்த்து அறுவை சிகிச்சையின் செயல்முறையைப் புரிந்துகொண்டு, தேவையான மருத்துவ வசதிகள் இல்லாமல் அறுவை சிகிச்சையைத் தொடங்கியுள்ளார்.
தனித்திருந்த வெளிநாட்டு தொழிலதிபரின் மனைவிக்கு நடந்தேறிய துயரம் ; இலங்கையின் பிரபல விடுதியில் சம்பவம்
அறுவை சிகிச்சையின்போது, மருத்துவரும் அவரது உதவியாளரும் தங்கள் மொபைல் போன்களில் வீடியோவை இயக்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், அந்தப் பெண்ணுக்கு கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேசையிலேயே இறந்துள்ளார். இருப்பினும், பச்சிளம் குழந்தை பாதுகாப்பாக வெளியே எடுக்கப்பட்டது.
பின்னர் மருத்துவரும், அவரது உதவியாளரும் அந்த விஷயத்தை நிராகரித்து, நோயாளியின் உடல்நிலை சரியில்லை என்றும், அவரை வேறு மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறியதுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், அந்தப் பெண்ணின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.