ஒரே ஒரு சன் கிளாஸ்; பட்டிதொட்டி எங்கும் வைரலாகும் மூதாட்டி!
தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் , சேலத்தில் தான் அணிந்திருந்த சன் கிளாஸை மூதாட்டி ஒருவருக்கு பரிசளித்த நிலையில், குறித்த மூதாட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்றையதினம் மேட்டூர் அணையை திறப்பதற்காக மேட்டூருக்கு சென்றார். மேட்டூர் அணையை திறந்து வைத்த பின் சின்னக்காவூரில் விவசாயிகளை முதல்வர் விஜய் சந்தித்து உரையாடிபோது மூதாட்டி ஒருவர் அவருடன் மிகவும் பாசமாக பேசி அவருடன் நடந்து சென்றார்.

பட்டிதொட்டி எங்கும் வைரலாகும் மூதாட்டி
அப்போது விஜய் தன்னிடமிருந்து சன் கிளாஸை அவருக்கு போட்டுவிட்டார். மூதாட்டி அந்த கண்ணாடியை அணிந்துகொண்டே விஜயுடன் வலம் வந்தார்.
அந்த கண்ணாடியின் விலை இந்திய ரூபாயில் ,30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை இருக்கலாம் என கூறப்படுகின்றது. இன்னிலையில் முதலமைச்சரிடம் சண்கிளாஸ் வாங்கிய மூதாட்டியுடன் பலரும் புகைப்படங்க்கள் எடுத்து வெளியிட்ட நிலையில் சமூகவலைத்தளங்களில் அந்த மூதாட்டி வைரலாகியுள்ளார்.