பெண் வர்த்தகர் செய்த மோசமான செயல் ; நாட்டிற்கு வந்தவுடனே அதிரடி கைது
ஹெட்டிபொல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய வர்த்தகப் பெண் ஒருவரும் சட்டவிரோதமாக சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் ‘பிளாட்டினம்’ வகையைச் சேர்ந்த 21,000 சிகரெட்டுகள் அடங்கிய 105 சிகரெட் கார்ட்டூன்களைத் தனது பயணப் பொதிகளில் மறைத்து வைத்துக் கொண்டு விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்றபோது, விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று (19) அதிகாலை 1.15 மணியளவில் துபாயிலிருந்து பிளைதுபாய் விமான சேவையின் FZ-569 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவரையும் கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகையையும் எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.