தமிழர் பகுதியில் நண்பர்களுடன் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட கள்ளியடி பகுதியில் அமைந்துள்ள பேராற்றில் நேற்றுமுன்தினம் (17) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணை
புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்றிருந்தபோதே குறித்த இளைஞன் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, நீரில் மூழ்கிய இளைஞனின் சடலம் மீட்கப்பட்டு, புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இளைஞனின் உயிரிழப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.