தமிழக சட்டசபை கூட்டத்தில் மீண்டும் "மன்மத நன்றி" ; அவையில் கலகல சிரிப்பு!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் போது கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் பேசிய பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சட்டப்பேரவையில் தனது தொகுதி பிரச்சினைகள் குறித்துப் பேசி உரையை நிறைவு செய்த அருள் விக்னேஷ், சபாநாயகருக்கு நன்றி தெரிவிக்கும் போது "மனமார்ந்த நன்றி" என்பதற்குப் பதிலாக எதிர்பாராதவிதமாக "மன்மத நன்றி" என்று கூறிவிட்டார்.

அவையிலும் சிரிப்பலை...
தான் தவறுதலாகச் சொன்னதை உணர்ந்து அவர் உடனடியாகச் சிரிக்க, அவையிலும் சிரிப்பலை எழுந்தது.
முன்னதாகஇ தனது முதல் சட்டப்பேரவை உரையின் போது கனிமொழி சந்தோஷும் இதேபோன்று "மனமார்ந்த நன்றி" என்பதற்குப் பதிலாக "மன்மத நன்றி" என்று கூறி சமூக வலைதளங்களில் பேசப்பட்டார் .
இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷும் அதே வார்த்தையைத் தவறுதலாக உச்சரித்தபோது, அவருக்கு முன்பாக அமர்ந்திருந்த கனிமொழி வெளிப்படுத்திய முகபாவனையும் இணையத்தில் தற்போது அதிக கவனம் பெற்று வைரலாகி வருகிறது.