சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி ; இந்த ராசிகளின் வாழ்க்கையில் பெரிய திருப்பம்
ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். தற்போது சுக்கிரன் சிம்ம ராசியில் உள்ளார். இந்நிலையில் ஜூலை 16 ஆம் திகதி சுக்கிரன் மகம் நட்சத்திரத்தில் இருந்து வெளியேறி, பூரம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.

இந்த பூரம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன் ஆவார். தனது சொந்த நட்சத்திரத்திற்குள் சுக்கிரன் நுழைவதால், அதன் சக்தி இரட்டிப்பாகி இருமடங்கு நன்மைகள் கிடைக்கப் போகிறது. இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை சந்திப்பார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

சிம்மம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். சமூகத்திலும், பணியிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உங்களின் பேச்சு அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருக்கும். புதிய வீடு, வாகனம், நகைகள் போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். கூட்டு தொழில் செய்து வருபவர்களுக்கு எதிர்பாராத அளவில் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

துலாம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களின் நீண்ட கால விருப்பங்கள் நிறைவேறும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். கலை, ஊடகம் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் பொற்காலமாக இருக்கும். செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். இது எதிர்காலத்தில் நல்ல ஆதாயங்களைத் தருவதாக இருக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

தனுசு
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளப்படும் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் ஆசைகள் நிறைவேறும். மாணவர்களுக்கு வெளிநாட்டில் படிப்பதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும் வாய்ப்புள்ளது.