பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட கோட்டாவின் தனிப்பட்ட செயலாளர்
சுகீஷ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில்
இன்று (01) முற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகீஷ்வர பண்டார, வரும் ஜூலை 08-ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சுகீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு, ஜூலை மாதம் 08 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்தது.
அதுவரை சந்தேகநபர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்படுவார் என கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று உத்தரவிட்டார்.

இந்த விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, விசாரணைகளை முன்னெடுக்கும் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுஜீஸ்வர பண்டார, இன்று (01) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுஜீஸ்வர பண்டார சிறைச்சாலை அதிகாரிகளினால் பலத்த பாதுகாப்புடன் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து ஒரே நேரத்தில் சம்பளம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு அமைவாக, கடந்த ஜூன் 18 ஆம் திகதி மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சுஜீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, சுஜீஸ்வர பண்டார விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.