சீனி இறக்குமதி மோசடி குறித்து உயர்நீதிமன்றம் எடுத்த தீர்மானம்
சீனிக்கான வரி குறைக்கப்பட்டமையினால் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்குமாறு பிரதிவாதிகள் தரப்பு முன்வைத்த அடிப்படை ஆட்சேபனைகளை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான வரி குறைக்கப்பட்டமையினால் அரசாங்கத்துக்கு 1,590 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி முந்தைய அரசாங்கத்தின் போது, தற்போதைய அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது, பிரதிவாதிகளின் ஆட்சேபனைகளை நிராகரித்த மூன்று பேர் கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி இந்த மனுவை பரிசீலிக்க உத்தரவைப் பிறப்பித்தது.