நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த மாணவன் இரண்டு மணி நேரத்திற்கு பின் மீட்பு
பதுளை பண்டாரவளை அம்பதண்டேகம களுவல பகுதியில் அமைந்துள்ள உடராவணா எல்ல நீர்வீழ்ச்சி பகுதியில் நேற்று மாலை நீராடச் சென்றிருந்த நான்கு பாடசாலை மாணவர்களும், இரண்டு இளைஞர் நண்பர்களும் இருந்த நிலையில், அவர்களில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கால் வழுக்கி சுமார் 40 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்துள்ளார்.
பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு சென்ற புலம்பெயர் தமிழர்களுக்கு நேர்ந்த கதி ; கொழும்பில் முறைப்பாடு
இதனைத் தொடர்ந்து நீந்தத் தெரிந்த மற்றொரு மாணவர் உடனடியாக பள்ளத்தில் இறங்கி, குறித்த மாணவரை மீட்டு முதலுதவி வழங்கியுள்ளார்.

பின்னர் காயமடைந்த மாணவர் 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவையின் மூலம் தியத்தலாவை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, காயமடைந்த மாணவரை மேலே கொண்டு வருவதற்காக 1990 அவசர சேவை அதிகாரிகள், நண்பர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து சுமார் இரண்டு மணி நேரம் கடும் சிரமத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான ஆபத்தான இடங்களில் நீராட இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.