பணத்துக்காக தனது பாடசாலை அதிபரை கொலை செய்த மாணவன்! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
பணத்துக்காக தனது பாடசாலை அதிபரை பத்தாம் வகுப்பு மாணவன் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலுங்கானாவில் உள்ள ஒரு தனியார் பாடசாலை அதிபராக இருந்தவர் ரூபா ரெட்டி. இவர் கடந்த 11ம் தேதி தனது வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

பணம் வைத்திருந்ததால் கண்டித்த அதிபர்
போலீசார் நடத்திய சோதனையில் கடைசியாக ரூபா தனது அத்தையிடம் ஃபோனில் பேசியிருக்கிறார். பேசி முடிக்கும் போது யாரையோ பாபு என அழைத்து விட்டு போனை கட் செய்திருக்கிறார்.
எனவே, தனது பாடசாலையில் படிக்கும் மாணவனைத்தான் அவர் அப்படி அழைத்திருக்க வேண்டும் என போலீசார் சந்தேகப்பட்டனர்.
அதன் அடிப்படையில் மாணவர்களை அவர்கள் கண்காணித்தபோதுதான் அதில் இரண்டு பேர் பார்களுக்கு செல்வது, பப்களுக்கு செல்வது, பணத்தை அதிகமாக செலவு செய்து என இருந்து வந்தனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போதுதான் அவர்கள் இருவரும் சேர்ந்து பள்ளி முதல்வரை கொலை செய்தது தெரிய வந்தது. அதில் ஒரு சிறுவன் ஹாஸ்டலில் தங்கியிருந்தபோது செல்போன் மற்றும் பணம் கையில் வைத்திருந்ததால் கண்டித்த அதிபர், சிறுவனை ஹாஸ்டலில் இருந்து நீக்கிவிட்டார்.
இந்த கோபத்தில் ரூபா வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்துகொண்ட அந்த சிறுவன் அவரின் வீட்டு சுவர் ஏறி உள்ளே குதித்திருக்கிறார். ஒரு மாணவர் வெளியே காத்திருந்தார்.
அந்த சிறுவனை பார்த்துதான் ரூபா ‘பாபு’ என அழைத்திருக்கிறார். அப்போது எடுத்துச் சென்ற கத்தியால் ரூபாவை சிறுவன் 27 முறை குத்தியதில் அவர் அங்கேயே மரணமடைந்தார். தற்போது அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.