வாகன தரிப்பிடத்தில் இருவர் செய்த தகாத செயல் ; வங்கி கணக்கில் குவிந்து கிடக்கும் பல கோடி ரூபாய் பணம்
சீதுவ பகுதியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் வைத்து 500 கிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்றிருந்த புலனாய்வு தகவலுக்கமைய சீதுவ பகுதியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து மேற்படி சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

பணப் பரிமாற்றங்கள்
45 வயதுடைய ஜயக்கொடி ஆரச்சிகே மகேஷ் கயான், 25 வயதான பத்திரணகே நவீன் ஹிருஷ பெர்னாண்டோ ஆகிய சீதுவ மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட கொக்கைன் போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 2 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும் என விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் கைதான நபர்களை நச்சு போதைப்பொருள் சட்டத்தின் கீழ் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்ஸ்டாகிராம் காதல் ; மாணவியை அடுத்தடுத்து பலாத்காரம் ; காதலன் உள்ளிட்ட நண்பர்கள் அரங்கேற்றிய கொடூரம்
இந்நிலையில் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது, இத்தாலியில் உள்ள தினேஷ் எனப்படும் போதைப்பொருள் வலயமைப்பைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரால், பல வருடங்களாக நாட்டில் உள்ள உயர்மட்ட வர்த்தகர்களுக்கு விமான நிலையத்தின் ஊடாக இந்தக் கொக்கைன் போதைப்பொருள் கொண்டுவந்து விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
வெவ்வேறு நிறுவனங்களின் வாகனத் தரிப்பிடங்களில் வைத்து போதைப்பொருள் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேக நபர்களில் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு சுமார் 20 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.
அத்தோடு இத்தாலியில் உள்ள தினேஷ் வழங்கும் அறிவுறுத்தல்களின்படி 30க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் ஊடாகப் பணம் பெறப்பட்டு இத்தாலிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள் விசாரணையின்போது வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இவ்வாறான பணப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் 25 வங்கிக் கணக்குகள் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.