கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த மாணவன்! ஆபத்தான நிலையில் சகோதரர்
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த உயர்தர மாணவன் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் எதிர்வரும் 23ஆம் திகதி ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
ஏறாவூரில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவனான மனாப்தீன் அப்துர் ரஹ்மான் (வயது 19) என்பவர் நேற்றய தினம் (07-01-2023) குடும்ப சகிதம் ஏறாவூர் சவுக்கடி கடற்கரைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது குறித்த மாணவர் தன் சகோதரருடன் குளித்துக் கொண்டிருந்த போது பாரிய அலையால் இருவரும் அள்ளுண்டு சென்றுள்ளனர்.
பின்னர் மற்றுமொரு அலையினில் இருவரும் கரைக்கு வந்த போது குறித்த மாணவன் உயிரிழந்திருந்தார்.
மேலும், அவரது சகோதரர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.