கைவிடப்பட்ட ஒலுவில் துறைமுக செயல்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை
இலங்கையின் கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
ஒலுவில் துறைமுகத்துக்கு அமைச்சர் நேற்று (26) கண்காணிப்பு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் அமைச்சருடன், அமைச்சின் செயலாளரும் உடனிருந்தார்.
விரைவில் நடவடிக்கை
இதன்போது துறைமுகத்தை அமைச்சர் பார்வையிட்டதுடன், பல தரப்பினருடனும் சந்திப்புகளில் ஈடுபட்டு கருத்தகளை கேட்டறிந்துகொண்டார்.
இந்நிலையில் கைவிடப்பட்டுள்ள நிலையில் இருக்கும் ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான சாத்தியப்படுகள் தொடர்பில் அமைச்சர் அவதானம் செலுத்தியுள்ளதுடன், இதற்குரிய நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.