வியாழேந்திரன் கைதால் மட்டக்களப்பில் சரவெடி!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு கைது செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்ததையடுத்து மட்டக்களப்பில் வெடி கொழுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு முன்னாள் இராஜாங்க அமைச்சர் .வியாழேந்தின் நேற்று முன் தினம் கைதாகியிருந்தார்.
வெடி கொழுத்தி கொண்டாட்டம்
இதனையடுத்து வியாழேந்திரன் கைது தொடர்பில் தகவல் வெளியானதை அடுத்து சில இளைஞர்கள் மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்து வீதி சுற்றுவட்டத்தில் நேற்று முன்தினம் (25) இரவு 9.00 மணியளவில் வெடி கொழுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் கைது விவகாரத்தையடுத்து மட்டக்கள்ப்பு மாவட்ட மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியிருந்தது.
இந்நிலையில், மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்து வீதி சுற்றுவட்டத்தில் இளைஞர்கள் குழு ஒன்றிணைந்து வெடிகளை கொளுத்தி சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதேவேளை வெடி சத்தத்தால் அப்பகுதி அதிர்ந்ததையடுத்து மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.